இரு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் : 2022 – 23ம் ஆண்டுக்கான் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2022, 1:42 pm
Nirmala Budget - Updatenews360
Quick Share

2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யப்பட உள்ளது.

2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1-ஆம் தேதி நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்டத் தொடரானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கூட்டத் தொடரானது மார்ச் 11-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 203

0

0