பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து விவாதம்..! ஜனவரி 30’ஆம் தேதி மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்..!

20 January 2021, 2:24 pm
PM_Modi_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 30’ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். அப்போது பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் முன்வைக்கும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று தெரிவித்தார்.

கூட்டம் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் நடைபெறும் என்றும், அனைத்து கட்சிகளின் அவைத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அமர்வின் தொடக்கமும் அதன் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்கு முன்னர் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவது ஒரு வழக்கமான நடைமுறையாகும். இருப்பினும், இந்த முறை ஜனவரி 29’ஆம் தேதி அமர்வு தொடங்கி ஒரு நாள் கழித்து நடைபெறுகிறது.

“அனைத்து கட்சி கூட்டம் ஜனவரி 30’ஆம் தேதி நடைபெறும். அப்போது மத்திய அரசு தனது பட்ஜெட் கூட்டத்தொடரில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்து முன்வைக்கும். மேலும் எதிர்க்கட்சியின் பரிந்துரைகளையும் கேட்கும்” என்று பிரஹலாத் ஜோஷி கூறினார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 முதல் தொடங்கி இரண்டு பகுதிகளாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் பகுதி பிப்ரவரி 15’ஆம் தேதி வரையும், இரண்டாம் பகுதி மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரையும் நடைபெறும்.

பாராளுமன்றம் காலையில் ராஜ்யசபா கூட்டம், மாலை மக்களவை கூட்டம் என இரண்டு ஷிப்டுகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுளளது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொற்றுநோய்களுக்கு மத்தியில் பட்ஜெட் கூட்டத்தொடரை சிறப்பாக அனைத்து முன்னெச்சரிக்கையுடனும் நடத்துவதற்காக உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளின் கூட்டத்தை நேற்று கூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0