வெள்ளத்தில் சிக்கிய எருமைகள் : அணையில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி!!
30 September 2020, 11:04 amQuick Share
ஆந்திரா : மழை வெள்ளம் காரணமாக பிரகாசம் கிருஷ்ணா நதியில் எருமைகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்கள், கிராமங்கள் ஆகியவை தண்ணீரில் தத்தளிக்கின்றன.
இந்த நிலையில் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விஜயவாடா அருகே சமீபத்தில் கட்டப்பட்டிருக்கும் பிரகாசம் அணை வழியாக கிருஷ்ணா நதியில் அடித்து செல்லப்பட்டன.
பொங்கி ஓடும் தண்ணீரில் எருமைகள் அடித்து செல்லப்படுவதை பார்த்த பொதுமக்கள் பரிதாபபடுவதை தவிர அவற்றை மீட்க இயலாத நிலையில் இருந்தனர்.
Views: - 1
0
0