புல்லட் ரயில் திட்டம்: ரூ. 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம்…!!

27 November 2020, 4:21 pm
bullet train - updatenews360
Quick Share

புதுடெல்லி: அகமதாபாத்- மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டத்தில் 24,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளைச் செயல்படுத்தும் ஒப்பந்தம் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்திற்காக உள்கட்டமைப்பு நிறுவனமான எல் அண்டு டி உடன் நாட்டின் மிகப் பெரிய அரசு நிதியுதவி பெற்ற ரூ.24,000 கோடி சிவில் ஒப்பந்தத்தில் தேசிய அதிவேக ரெயில் கார்ப்பரேஷன் கையெழுத்திட்டுள்ளது. இது இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிகத் தொகைக்கான கட்டுமானப் பணி ஒப்பந்தமாகும்.

இதனால் கட்டுமானப் பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் அப்பகுதியில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெறும் எனக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய இந்தியாவுக்கான ஜப்பானிய தூதர் சடோஷி சுசுகி, பொருளாதார நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டிய நேரத்தில் இதுபோன்ற மகத்தான உள்கட்டமைப்பு திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஜப்பானிய தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு மாற்றுவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், நகர்ப்புற வளர்ச்சியை மாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான வி கே யாதவ் கூறுகையில், இந்த முதல் புல்லட் ரயில் திட்டம் முடிந்ததும், மேலும் ஏழு வழித்தடங்களில் இதுபோன்ற மேலும் ரயில் தாழ்வாரங்களை அரசு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0