உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்…!!

11 November 2020, 4:10 pm
modi local buy - updatenews360
Quick Share

புதுடெல்லி: 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊக்கத் தொகை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு 1.5 லட்சம் கோடி அளவிலான சலுகைகள் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

NIRMALA_SITHARAMAN_UpdateNews360

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு 1.5 லட்சம் கோடி அளவிலான சலுகைகள் அளிக்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏசி, பல்ப், எல்இடி உள்ளிட்ட பொருட்கள், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கும் ஊக்கம் வழங்கப்படுகிறது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வாகன தயாரிப்பு, ஜவுளி உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு சலுகைகள் கிடைக்கும் எனவும், தொழிற்சாலைகளின் உற்பத்திக்கு ஏற்ப சலுகைகள் அளிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Views: - 29

0

0