ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் கிராமப்புற மேம்பாட்டிற்கு சிறப்பு நிதி..! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

By: Sekar
14 October 2020, 7:32 pm
Prakash_Javadekar_Updatenews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (என்ஆர்எல்எம்) கீழ் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு 520 கோடி ரூபாய் சிறப்பு நிதித் தொகுப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியத்திற்கு சிறப்பு நிதியளிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பிரகாஷ் ஜவடேகர், இரு பிராந்தியங்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் போதுமான நிதியை அரசு உறுதி செய்யும் என மேலும் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களில் மத்திய நிதியுதவி பெறும் அனைத்து பயனாளிகள் சார்ந்த திட்டங்களையும் குறிப்பிட்ட காலக்கெடுவில் செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்த முடிவு உள்ளது உள்ளது என அவர் கூறினார்.

என்.ஆர்.எல்.எம் கிராமப்புற ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதார மேம்பாடுகள் மற்றும் நிதி சேவைகளுக்கான மேம்பட்ட அணுகல் மூலம் வீட்டு வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.

Views: - 47

0

0