மும்பை தாஜ் ஹோட்டலில் மீண்டும் குண்டுவெடிக்கும்..? பாகிஸ்தானிலிருந்து வந்த போன் காலால் பதற்றம்..!

30 June 2020, 12:32 pm
Mumbai_Taj_Hotel_UpdateNews360
Quick Share

மும்பையின் சின்னமான தாஜ் ஹோட்டலுக்கு பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. கராச்சியில் இருந்து நேற்று அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. தாஜ் ஹோட்டல் மற்றும் பாந்த்ராவின் தாஜ் லேண்ட்ஸ் எண்டில் வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதற்கிடையில், ஹோட்டலுக்கு வெளியேயும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டு, போலீசார் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதிகாரிகள் அந்த பகுதியைச் சுற்றியுள்ள வாகனங்களை சோதனை  வருகிறார்கள்.

ஹோட்டல் வளாகம் முழுவதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் அழைப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

போனில் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்று அடையாளம் காட்டி மும்பையில் உள்ள இரண்டு ஹோட்டல்களையும் வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தியுள்ளார்.

முதல் அழைப்பு அதிகாலை 12:30 மணியளவில் தாஜ்மஹால் அரண்மனை ஊழியர்களால் பெறப்பட்டது. இந்த அழைப்பு பாகிஸ்தான் எண்ணிலிருந்து வந்தது. அழைத்தவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் உறுப்பினர் என்று அடையாளம் காட்டி, ஹோட்டல் தங்கள் உறுப்பினர்களால் தாக்கப்படும் என்று கூறினார்.

நவம்பர் 2008’இல் நடந்ததைப் போல தாஜ்மஹால் அரண்மனை மற்றும் தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டல்கள் வெடிக்கப்படும் என்று அவர் கூறினார்.

இரண்டாவது அழைப்பை பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டலில் பணியாளர்கள் பெற்றனர். அதிலும் பாகிஸ்தானைச் சேர்ந்த நபர், இதேபோல் ஹோட்டலை வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தினார். இரண்டு அழைப்புகளும் ஒரே எண்களிலிருந்து பெறப்பட்டன.

இது தொடர்பான மேலதிக விசாரணை காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply