சி.ஏ படிப்பு: 10ம் வகுப்பு முடித்த உடனே விண்ணப்பிக்கலாம்..!!

21 October 2020, 5:01 pm
ICAIS - updatenews360
Quick Share

CA எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பில் சேர 10ம் வகுப்பு முடித்த உடனேயே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டயக் கணக்காளர் படிப்பான சி.ஏ படிப்பை இந்திய பட்டயக் கணக்காளர்(ICAI) நிறுவனம் நடத்துகிறது. 12ம் வகுப்பு முடித்து, சி.ஏ அடிப்படை பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்து, 4 மாதங்கள் பயிற்சி பெற்று தேர்வு எழுதும் முறையில் புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

icai - updatenews360

இந்நிலையில், 10ம் வகுப்பு முடித்த உடனேயே சி.ஏ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் போது சி.ஏ தேர்வுக்கு பயிற்சி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்தவுடன் சி.ஏ அடிப்படை பாடப்பிரிவுக்கான தேர்வை எழுதலாம் என ICAI அறிவித்துள்ளது.

சி.ஏ அடிப்படை பாடப்பிரிவு தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்கும் விதமாகவும், தேர்வு தயாராகும் காலத்தை அதிகரிக்கும் விதமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Views: - 32

0

0