கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கைது..! பண மோசடி வழக்கில் சிபிஐ அதிரடி..!

23 November 2020, 9:07 am
Roshan_Baig_UpdateNews360
Quick Share

பல கோடி மதிப்பிலான ஐ-நாணய ஆலோசனை (ஐஎம்ஏ) நிறுவனத்தின் கவர்ச்சிகர முதலீட்டுத் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரோஷன் பேக் இன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பேக் இன்று காலை சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார். இந்நிலையில் விசாரணை நடந்து முடிந்த பிறகு ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னாள் சிவாஜி நகர் எம்.எல்.ஏவான பேக் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் நீதிமன்றத் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கர்நாடகாவை தளமாகக் கொண்ட ஐ.எம்.ஏ மற்றும் அதன் குழு நிறுவனங்கள் நடத்தும் பல கோடி மதிப்பிலான கவர்ச்சிகர முதலீட்டுத் திட்டம் இஸ்லாமிய முதலீட்டு வழிகளைப் பயன்படுத்தி அதிக வருமானத்தை அளிப்பதாக லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரும் சிபிஐ விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதால், அவரும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவதால், காங்கிரஸ் வட்டாரங்கள் பரபரப்பில் உள்ளது. 

Views: - 23

0

0

1 thought on “கர்நாடக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கைது..! பண மோசடி வழக்கில் சிபிஐ அதிரடி..!

Comments are closed.