ஒரு கோடி ரூபாய் லஞ்சம்..! வசூல் வேட்டை நடத்திய ரயில்வே அதிகாரி..! கையும் களவுமாக பிடித்த சிபிஐ..!

17 January 2021, 5:06 pm
CBI_Office_UpdateNews360
Quick Share

ரூ 1 கோடி லஞ்சம் வாங்கியதாக இந்திய ரயில்வே இன்ஜினியரிங் சர்வீஸ் (ஐஆர்இஎஸ்) மூத்த அதிகாரியை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 20 இடங்களில் தேடுதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு எல்லை ரயில்வே (என்.எஃப்.ஆர்) திட்டங்களின் ஒப்பந்தங்களை வழங்குவதில் குறிப்பிட்ட சிலருக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் கொடுக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து சிபிஐ விசாரணையை மேற்கொண்டது. 

இதையடுத்து இன்று நடாத்தில்லையா அதிரடி சோதனையில், 1985 பேட்ச் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகேந்தர் சிங் சவுகான் வலுவான ஆதாரங்களுடன் சிக்கினார். இதையடுத்து அவரைக் கைது செய்துள்ள சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.

அசாமில் உள்ள மாலிகானில் உள்ள என்.எஃப்.ஆர் தலைமையகத்தில் இந்த அதிகாரி பணி புரிந்து வந்துள்ளார். அவர் பெற்ற லஞ்சப் பணத்தையும் சிபிஐ மீட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

டெல்லி, அசாம், உத்தரகண்ட் மற்றும் இரண்டு மாநிலங்களில் உள்ள 20 இடங்களில் சிபிஐ, தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 0

0

0