1,400 கோடி வங்கி முறைகேடு..! சிக்கியது பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்..! சிபிஐ வழக்கு பதிவு..!

21 September 2020, 8:20 pm
Kwality_Limited_UpdateNews360
Quick Share

பாங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பை மோசடி செய்ததற்காக பால் பொருட்கள் தயாரிக்கும் குவாலிட்டி லிமிடெட் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று மோசடி வழக்கு பதிவு செய்தது.

இந்நிறுவனம் ரூ 1,400 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாங்க் ஆப் இந்தியாவின் புகாரின் பின்னர் சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்தது. டெல்லி, புலந்த்ஷாஹர், சஹாரான்பூர், அஜ்மீர், பல்வால் உள்ளிட்ட எட்டு இடங்களில் சிபிஐ இன்று தேடுதல் வேட்டையை நடத்தியது.

நிறுவனத்தின் இயக்குநர்கள் சஞ்சய் திங்க்ரா, சித்தாந்த் குப்தா மற்றும் அருண் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

வங்கி நிதிகளை திசை திருப்புதல், தொடர்புடைய நபர்களுடன் மோசடி பரிவர்த்தனைகள், போலி ஆவணங்கள் மற்றும் ரசீதுகள், பொய்யான கணக்குகளின் புத்தகங்கள் மற்றும் தவறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை உருவாக்குதல் போன்ற வழிகளில் குவாலிட்டி லிமிடெட் அவர்களை ஏமாற்றியதாக வங்கிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளன.

புகார் தெரிவித்ததில் பாங்க் ஆப் இந்தியா தவிர, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஆந்திர வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஐடிபிஐ, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, தனலக்ஷ்மி வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை அடங்கும்.

ஏற்கனவே பல நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து கடன் பெற்று முறைகேடு செய்த விவகாரத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது மற்றொரு நிறுவனமும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 3

0

0