வங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்..! அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..!
27 January 2021, 5:17 pmகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, சிபிஐ கோரிக்கையின் பேரில் கொல்கத்த நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது.
சிபிஐ இதுவரை நான்கு முறை வினய் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் விசாரணையில் ஆஜராகாமல் தவிர்த்து வந்துள்ளார். இந்த வழக்கு எல்லை தாண்டிய கால்நடை கடத்தல் தொடர்பானது. மிஸ்ரா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக்கின் நெருங்கிய உதவியாளர் என்று நம்பப்படுகிறது.
இதற்கு முன்னர், சிபிஐ மேற்கு வங்கத்தில் மிஸ்ராவின் வீடு உட்பட, பல இடங்களில் சோதனைகளை நடத்தியது. கடந்த ஆண்டு, அவரது ராஷ்பேஹரி அவென்யூ இல்லத்தில் நடந்த ஏழு மணி நேர தேடலின் போது, அதிகாரிகள் குற்றச்சாட்டுக்கு தேவையான ஆவணங்களை கைப்பற்றினர்.
தகவல்களின்படி, எல்லை தாண்டிய கால்நடை கடத்தல் மோசடியின் ராஜாவான எனமுல் ஹக் உடன் தொடர்புடைய முதல் அரசியல்வாதி திரிணாமுல் கட்சியின் தலைவரான வினய் மிஸ்ரா தான் எனக் கூறப்படுகிறது.
கால்நடை கடத்தல் மோசடியில் ஹக்கின் சார்பாக முன்னணியில் மிஸ்ரா செயல்பட்டார் என்று சிபிஐ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கால்நடை கடத்தல் மற்றும் சட்டவிரோத நிலக்கரி வர்த்தக மோசடிகள் பற்றிய தகவல்களைக் கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட இரண்டு 24 மேற்கு வங்க காவல்துறை அதிகாரிகளின் பட்டியலையும் சி.பி.ஐ. தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
0
0