கொரோனாவால் நாடுமுழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து..! 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு..!

14 April 2021, 2:31 pm
10th_CBSE_EXams_Cancelled_UpdateNews360
Quick Share

10 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறாது என்றும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்தார். 

மேலும் மத்திய கல்வி அமைச்சர் தனது அறிவிப்பில், 12’ஆம் வகுப்பு தேர்வுகளை மே 30 வரை சிபிஎஸ்இ ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஜூன் 12’ஆம் தேதி 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை சிபிஎஸ்இ வாரியம் வெளியிடும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் பிற அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

“2021 மே 4 முதல் ஜூன் 14 வரை நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புக்கான வாரிய தேர்வுகள் இதன்மூலம் ரத்து செய்யப்படுகின்றன. வாரியத்தால் உருவாக்கப்பட வேண்டிய ஒரு புறநிலை அளவுகோலின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு வாரியத்தின் முடிவுகள் தயாரிக்கப்படும். 

எந்தவொரு மாணவரும் புறநிலை அளவுகோலின் அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி அடையவில்லை என்றால், அவர்களுக்கு மட்டும் ஒரு தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும், மேலும் தேர்வுகள் நடத்த நிபந்தனைகள் இருக்கும்.” என்று கல்வி அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

முந்தைய அட்டவணையின்படி, மே 4 முதல் ஜூன் 7 வரை சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 25

0

0