திருப்பதியில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன்: சாட்சியான 3வது கண்….போலீசார் தீவிர தேடுதல்…!!

3 March 2021, 4:32 pm
tirupathi cctv2 - updatenews360
Quick Share

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பக்தர்களின் 6 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக 27ம் தேதி திருப்பதி வந்தனர். திருப்பதியில் உள்ள அலிபிரி பேருந்து நிலையம் அருகே அனைவரும் இலவச தரிசன டிக்கெட் பெற காத்திருந்தனர். அப்போது பக்தர்கள் கூட்டத்தில் 6 வயது சிறுவன் சிவம்குமார் சாகு மாயமானான்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் பல இடங்களில் சிவம்குமார் சாகுவை தேடிய நிலையில் சிறுவனை கண்டுபிடிக்க இயலவிலலை. இதையடுத்து திருப்பதி நகரில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் கடந்த 2 தினங்களாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சிவம்குமார் சாகுவை 50 வயது மதிக்கதக்க ஒருவர் அழைத்து செல்வது பதிவாகி உள்ளது. இதையடுத்து சி.சி.டி.வி கேமிரா காட்சிகளின் ஆதாரமாக அலிபிரி காவல் நிலைய ஆய்வாளர் தேவேந்திர குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்.

காணமல் போன சிறுவனை கண்டு பிடிப்பதற்காக திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பல் நாயுடு உத்தரவின்படி 4 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவன் குறித்து தகவல் தெரிந்தால் 9440796752 அல்லது போலீஸ் வாட்ஸ்அப் எண் 8099999977 அல்லது காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 6309913960 என்ற எண்ணில் தெரிவிக்குமாறும் தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய பரிசு தொகை வழங்கப்படும் என அலிபிரி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 1

0

0