மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம்..! எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடி..!

Author: Sekar
1 October 2020, 3:26 pm
Line_of_Control_Jammu_Kashmir_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரில் இன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டதில் மூன்று இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய இராணுவம், பாகிஸ்தானுக்கு பொருத்தமான பதில் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை அனுப்ப தொடர்ந்து இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் இந்தியாவின் பதிலடியில் பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

குப்வாராவில் பாகிஸ்தான் திடீரென யுத்த நிறுத்த மீறலைத் தொடங்கியதை அடுத்து, நௌகம் செக்டரில், இரண்டு வீரர்கள் வீர மரணமடைந்தனர் . மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

இதே போல் பூஞ்ச் பகுதியிலும், பாகிஸ்தான் வீரர்கள் யுத்த நிறுத்த மீறலை நடத்தி, கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் மோட்டார் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டதில் ஒரு இராணுவ ஜவான் வீர மரணமடைந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். 

கடந்த ஐந்து நாட்களில், பாகிஸ்தான் பூஞ்சில் உள்ள குக்கிராமங்களை குறிவைத்து ஷெல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், செவ்வைய்கிழமை பூஞ்ச் பகுதியில் பல விலங்குகளுக்கு காயம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் ராணுவம் செப்டம்பர் மாதம் மட்டும் 47 முறை யுத்த நிறுத்தத்தை மீறியது. கடந்த எட்டு மாதங்களில் பாகிஸ்தானின் 3,000’க்கும் மேற்பட்ட போர்நிறுத்த மீறல்களை பதிவு செய்துள்ளன. இது கடந்த 17 ஆண்டுகளில் மிக அதிகபட்சமாகும்.

Views: - 38

0

0