இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா 2ம் அலை பாதிப்பு: 6 மாநிலங்களில் மத்தியக் குழு ஆய்வு..!!

2 July 2021, 4:09 pm
Corona_Treatment_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: இந்தியாவில் கோவிட் இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் 6 மாநிலங்களில் மட்டும் தொற்று அதிகரிப்பதால் அங்கு மத்திய குழு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

கேரளா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தலா இரு நபர்கள் கொண்ட குழுவில் ஒரு மருத்துவம் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது, இக்குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சென்று பரிசோதனை கண்காணிப்பு உள்ளிட்ட கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கும்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு, ஆம்புலன்ஸ், வென்டிலேட்டர், மருத்துவ ஆக்சிஜன் இருப்பு குறித்து ஆய்வு செய்வதுடன் மாநில அரசுக்கு தேவையன அறிவுரைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கும் என தெரிவித்துள்ளது.

Views: - 132

0

0