சினிமா அரங்குகள் 100% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி..! நிலையான இயக்க நடைமுறையை வெளியிட்டது மத்திய அரசு..!

31 January 2021, 11:17 am
Cinema_Halls_Corona_UpdateNews360
Quick Share

பிப்ரவரி 1 முதல் சினிமா அரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, சினிமா அரங்குகள் மற்றும் திரையரங்குகளுக்கான நிலையான இயக்க நடைமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சினிமா அரங்குகள் முழுமையாக செயல்பட அனுமதி : மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்

  • எந்தவொரு படங்களும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் திரையிடப்படாது
  • பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சினிமா அரங்குகள் கட்டாயமாக முககவசங்கள் அணிவது மற்றும் தெர்மல் ஸ்கேனிங் தவிர சானிட்டைசேஷன் வேறு சில நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
  • தியேட்டர்களில் பிரிக்கப்பட்ட இருக்கைகள், வெவ்வேறு நேரங்கள் மற்றும் முன்பதிவுகள், சமூக விலகல் கட்டாயமாக இருக்கும்
  • டிஜிட்டல் பணப்பரிமாற்றம் ஊக்குவிக்கப்படுகின்றன.

முன்னதாக சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட அதன் கடைசி வழிகாட்டுதல்களில், சினிமா அரங்குகள் அதிக திறன் கொண்டதாக செயல்பட அரசாங்கம் அனுமதித்த நிலையில் அதற்கான நிலையான இயக்க நடைமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அக்டோபர் 2020’இல், சினிமா அரங்குகள் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் செயல்பட மத்திய அரசு அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை, கடந்த ஆண்டு ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு மூடப்பட்டிருந்த சினிமா அரங்குகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக உள்ளது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0

1 thought on “சினிமா அரங்குகள் 100% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி..! நிலையான இயக்க நடைமுறையை வெளியிட்டது மத்திய அரசு..!

Comments are closed.