முப்படைகளுக்கும் அவசரகால அதிகாரங்கள் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிப்பு..! மத்திய அரசு அதிரடி..!

Author: Sekar
31 December 2020, 8:20 pm
Army_Arunachal_UpdateNews360
Quick Share

சீனாவுடனான மோதல் இன்னும் தொடரும் நிலையில், முப்படைகளின் போர் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக அவசர தேவைகளின் கீழ் ஆயுத அமைப்புகளை வாங்க பாதுகாப்பு படையினருக்கு மூன்று மாத கால நீட்டிப்பை மத்திய வழங்கியுள்ளது.

லடாக் செக்டரில் சீன மீறல்களுக்குப் பின்னர் 2020 நடுப்பகுதியில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட விரோதிகளுடன் ஆயுத மோதலுக்கு சிறந்த முறையில் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக, முப்படைகளுக்கும் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு ஆயுத அமைப்பையும் வாங்க அல்லது குத்தகைக்கு எடுக்க அவசர அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

“மோதல்களுக்கு சிறந்த தயாரிப்புக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து அதிக ஆயுத அமைப்புகளை வாங்க அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்த முப்படைகளும் கூடுதலாக மூன்று மாதங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த அவசர கால அதிகாரங்கள் மூலம் ஏற்கனவே இரண்டு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள கையகப்படுத்துதல்களை முப்படைகளும் இறுதி செய்துள்ளன. மேலும் எந்தவொரு பக்கத்திலும் சவால்களை எதிர்கொள்ள சிறந்த நிலையில் உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஆயுத சேமிப்பு அல்லது முழுமையான போர்க்காலங்களில் கையிருப்பை 15-I நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதாவது 10 நாட்கள் தீவிர யுத்த சண்டைக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேமிப்பதற்கு பதிலாக, அவை 15 நாட்கள் தீவிரமான போருக்கு சேமித்து வைக்கப்படும்.

2016’ஆம் ஆண்டில் யூரி தாக்குதலுக்குப் பிறகு, 10 நாட்கள் என்பது குறைவானது என்பது உணரப்பட்டது. அப்போதைய மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை துணைத் தலைவர்களின் நிதி அதிகாரங்களை ரூ 100 கோடியிலிருந்து ரூ 500 கோடியாக உயர்த்தியது.

மேலும் முப்படைகளுக்கும் ரூ 300 கோடி மதிப்புள்ள பொருட்களை வாங்குவதற்கான அவசர நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

இரு எதிரிகளையும் திறம்பட எடுத்துக்கொள்வதற்காக பாதுகாப்புப் படைகள் ஏராளமான உதிரிபாகங்கள், ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் அமைப்புகளை வாங்குவது குறிப்பிடத்தக்கது.

Views: - 61

0

0