மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் சீற்றம் காட்டும் கொரோனா..! உயர்மட்ட குழுவை அனுப்பி வைத்தது மத்திய அரசு..!

6 March 2021, 8:05 pm
maharashtra_updatenews360
Quick Share

மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாநில சுகாதார அதிகாரிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு உயர்நிலை பொது சுகாதார குழுக்களை மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபிற்கு அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத் துறைகளுக்கு உதவ இந்த குழுக்கள் நிறுத்தப்படுகின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அணிகள் மாநிலங்களில் உள்ள கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளை பார்வையிடும் மற்றும் பாதிப்புகள் அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின்ன் தரவுகளின்படி, பஞ்சாபில் 6,661 கொரோனா நோயாளிகளும், மகாராஷ்டிராவில் 90,055 கொரோனா நோயாளிகளும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் அந்தந்த மாநில சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவுள்ள கண்டறிதல் மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை தருவார்கள்.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சி என்ற அடிப்படையில் முழு அரசு மற்றும் முழு சமூகமும் என்ற அணுகுமுறையுடன் முன்னெடுத்து வருகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நிர்வாகத்திற்கான பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களின் முன்முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளாக, பல்வேறு மாநிலங்கள் மற்றும் உணின் பிரதேசங்களை பார்வையிட அரசாங்கம் அவ்வப்போது மத்திய குழுக்களை நியமித்து வருகிறது.

இந்த அணிகள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிக்கல்களைப் பற்றிய முதல் புரிதலைப் பெறுகின்றன. இதனால் அவர்களின் தற்போதைய செயல்பாடுகளை வலுப்படுத்தவும், ஏதேனும் இருந்தால் தடைகளை நீக்கவும் முடியும்.

மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக மத்திய அணிகளின் அறிக்கைகள் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

Views: - 3

0

0