விசா இல்லாமல் 16 நாடுகளுக்கு பயணிக்கலாம் : மத்திய அரசு தகவல்!!

23 September 2020, 5:42 pm
Passport- updatenews360
Quick Share

இந்தியாவில் இருந்து 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு வழங்கப்படும் விசா குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பபட்டது. இது குறித்து பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன், சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள இந்திய குடிமக்கள் பார்படாஸ், பூட்டான், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங் எஸ்.ஏ.ஆர், மாலத்தீவுகள், மொரிசியஸ், மொன்செராட், நேபாளம், நியூ தீவு, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடென்ஸ், சமோவா, செனகல், செர்பியா மற்றும் டிரினாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

இந்திய பயணிகளுக்கு ஈரான், இந்தோனேஷியா, மியான்மர் உள்ளிட்ட 43 நாகள் விசா ஆன் வருகை வசதியை வழங்குகிறது. இலங்கை, நியூசிலாதந்து, மலேசியா உள்ளிட்ட 36 நாடுகளில் இந்திய பயணிகளுக்க இ-விசா வசதியும் வழங்கப்படுகிறது.

இந்தியர்களுக்கான சர்வதேச பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் விசா இல்லாத பயணம், விசா – வரகை மற்றும் இ-விசா வசதிகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முரளிதரன் மாநலிங்களவையில் தெரிவித்துள்ளார்.

Views: - 2

0

0