‘இது தேசத்தின் அடையாளம்.. எங்களை பெருமைப்படுத்தீட்டீங்க’… இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு..!!

Author: Babu Lakshmanan
24 August 2023, 11:33 am

சந்திரயான் 3 வெற்றி பெற்றதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்த நிலையில், நேற்று மாலை (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

Chandrayaan 2 & 3 - Updatenews360

இதன்மூலம், சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் இருக்கும் தரை கட்டுப்பாடு மையத்துடன் சந்திராயன்-3 லேண்டரின் தொடர்பு வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், லேண்டர் கிடைமட்ட வேகக் கேமராவில் நிலவில் இறங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளிட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட பதிவில், “சந்திராயன்-3 லேண்டர் மற்றும் பெங்களூரு தரை கட்டுப்பாடு மையத்துடன் (MOX-ISTRAC), இடையே தொடர்பு இணைப்பு நிறுவப்பட்டுள்ளது.”என்று பதிவிட்டுள்ளது.

தொடர்ந்து, பிரக்யான் ரோவரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பிரக்யான் ரோவர் நிலவில் நகரத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, நிலவில் நடைபோடும் இந்தியா எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவின் மாபெரும் சாதனை உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதன்முறையாக நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கியதன் மூலம் நமது தேசம் பெருமைக்குரிய அடையாளத்தை பதித்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள், எனக் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!