பெங்களூருவில் ரசாயனப் பொருட்கள் வெடிப்பு…2 கி.மீ. வரை கேட்ட வெடிச்சத்தம்: 3 பேர் உயிரை பறித்த விபத்து..!!

Author: Aarthi Sivakumar
23 September 2021, 4:57 pm
Quick Share

பெங்களூரு: தரகுப்பேட்டை பகுதியில் ரசாயனப் பொருட்களால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தரகுப்பேட்டை பகுதியில் இன்று மதியம் பயங்கர சத்ததுடன் திடீரென ரசாயனப்பொருட்கள் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 3 பேர் பலியாகினர்.

மேலும், காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிப்பு, பெங்களூருவில் உள்ள போக்குவரத்துத் துறையின் கிடங்குக்கு பக்கத்தில் இருந்த வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைக்கு அருகே வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால், 2 கி.மீ. சத்தம் கேட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் இருந்த இரண்டு பேர் உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 4 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

காலாவதியான சில ரசாயனப்பொருட்கள் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டது என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். வெடிப்புக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். வெடிப்பில் பலியானோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சில ரசாயனக் கலவைகளால் இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இந்த வெடிப்பில் வெடித்த பொருள் பற்றி இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெங்களூரு தெற்கு துணை போலீஸ் கமிஷனர் ஹரிஷ் பாண்டே கூறியதாவது, வெடிப்பின் காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இது கேஸ் சிலிண்டர், பட்டாசு வெடிப்பு அல்லது மின்சார கசிவு காரணமாக ஏற்பட்டது அல்ல என கூறினார்.

Views: - 151

0

0