சத்தீஸ்கர் மாநில எம்எல்ஏ திடீர் மரணம் : மாரடைப்பால் காலமானார்!!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2021, 11:04 am
சத்தீஸ்கர் மாநிலத்தின் எம்.எல்.ஏ தேவ்ரத் சிங் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நத்தகொன் மாவட்டம் ஹரங்கார் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்தவர் தான் தேவ்ரத் சிங்.
52 வயதுடைய இவர் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி தேவ்ரத் சிங் உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2017ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய இவர் ஜனதா காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினரானது குறிப்பிடதக்கது
Views: - 458
0
0