டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் : இன்று சோனியா காந்தியுடன் சந்திப்பு!!!

By: Udayachandran
18 June 2021, 8:59 am
Stalin Sonia - Updatenews360
Quick Share

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல் முறையாக சந்தித்தார். பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் அளித்தார்.

பிரதமருடனான சந்திப்பு மன நிறைவான சந்திப்பாக அமைந்துள்ளதாகவும் மேலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் மோடி உறுதியளித்ததாக ஸ்டாலின் தெரிவித்தார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், வேளாண் சட்டம் திரும்ப பெற வேண்டும், தடுப்பூசி அதிகம் வழங்க வேண்டும், உள்ளிட்ட 25 கோரிக்கைகளை பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்தார்.

இதனையடுத்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார்.

Views: - 193

0

0