லடாக்கில் எல்லை தாண்டியது நாங்கள் அல்ல.., இந்தியா மீது பழி சுமத்தும் சீனா..!

8 September 2020, 10:31 am
Quick Share

லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனல் போல் இருந்து வந்த லடாக் எல்லை பிரச்சனை தற்போது பற்றி எரிய தொடங்கியுள்ளது.

இந்தியா , சீனா இடையே 45 ஆண்டுகளாக எந்த துப்பாக்கி சண்டையும் நடைபெறாத நிலையில், நேற்று இரவு இருநாட்டு வீரர்களும் முதன் முதலாக துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர், ஷாங் ஷுலி, இந்திய ராணுவத்தினரே எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை கடந்து வந்து பாங் கோங் த்சோ ஏரியின் தெற்கு பகுதி மற்றும் ஷென்பவோ மலைபகுதிக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட தொடங்கியதாக தெரிவித்தனர்.

சீன வீரர்கள் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற போது திடீரென இந்திய ராணுவத்தினர் துப்பாக்கியால் தாக்கத் தொடங்கிவிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளனர். அத்துடன் நிலைமையை கட்டுப்படுத்த வேறு வழியின்றி பதிலடி கொடுக்கும் நிலைக்கு சீன் ராணுவம் தள்ளப்பட்டதாகவும் ஷாங் ஷுலி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய ராணுவத்தின் செயல், மோசமான ஆத்திரமூட்டும் செயல்பாடு என விமர்சித்த அவர், இத்தகைய ஆபத்தான செயல்களை இந்திய ராணுவம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சீன ராணுவத்தின் புகாருக்கு இந்திய தரப்பில் இதுவரை எந்த பதில் விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் எல்லைத் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு நாட்டு வீரர்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Views: - 0

0

0