படைகளை எளிதாக நகர்த்த புதிய சாலை..! சீன எல்லையில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்தியா..!

19 August 2020, 6:39 pm
Ladakh_China_Border_Updatenews360
Quick Share

வடக்கு எல்லைகளில் சீனாவை எதிர்கொள்ளும் முயற்சியில், இந்தியா லடாக் மற்றும் மணாலியை இணைக்கும் சாலையை அமைத்து வருகிறது. பணிகள் முடிந்ததும், இந்த சாலை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த லடாக் யூனியன் பிரதேசத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் மூன்றாவது இணைப்பாக செயல்படும்.

“மணாலியில் இருந்து லே வரை நிமு-பதம்-தர்ச்சா அச்சு வழியாக மாற்று இணைப்பை வழங்க சாலை கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இது ஸ்ரீநகரில் இருந்து சோஜிலா வழியாக செல்லும் தற்போதைய வழிகளோடு ஒப்பிடுகையில் நிறைய நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.” என்று அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சாலை மணாலிக்கும் லேக்கும் இடையிலான பயண நேரத்தை கிட்டத்தட்ட மூன்று நான்கு மணி நேரம் குறைக்கும். மிக முக்கியமாக, துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை கண்காணிக்கும் பாகிஸ்தான் ராடாரிலிருந்து விலகிச் செல்ல இது உதவும்.

தற்போதைய அச்சு சோஜிலாவிலிருந்து ஒன்று, இது டிராஸ்-கார்கில் அச்சு வழியாக லே வரை செல்கிறது. இது 1999’ஆம் ஆண்டு கார்கில் மோதலின் போது பாகிஸ்தானால் குறிவைக்கப்பட்டது.

ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலை அமைக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மற்ற முக்கிய இடங்களைத் தவிர, புதிய சாலை நிமுவையும் இணைக்கும். அங்கு இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான சமீபத்திய மோதலை அடுத்து பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கையின்படி, இந்த சாலை லேவிலிருந்து கார்டுங்லா நோக்கி பயணிக்கும். பின்னர் சசோமா-சாசர் லா-ஷியோக் மற்றும் தவுலத் பேக் ஓல்டி அச்சில் நகரும். மூலோபாய ரீதியாக முக்கியமான பகுதிகளுக்கு மாற்று வழியை அடையாளம் காணும் பொறுப்பு லே-அடிப்படையிலான எச்கியூ 14 கார்ப்ஸுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, சாலையை உருவாக்குவதற்கான வழியை இறுதி செய்வதற்கு முன்பு ஒரு இராணுவ பிரிவு சசோமாவிலிருந்து சாசர் லா வரை பயணித்தது.

சீன எல்லையில் இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான மோதலுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் புதிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இரு நாடுகளும் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி, பிரிந்து செல்ல ஒப்புக் கொண்டாலும், சீனா இதுவரை ஒப்புக் கொண்ட நடவடிக்கைகளை செயல்படுத்தவில்லை என்பதால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

Views: - 1

0

0