“ஆத்திரத்தை கிளப்புகிறது சீனா” – இந்திய ராணுவம் தகவல்..!

31 August 2020, 11:40 am
Quick Share

லடாக் எல்லையில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபடுவதாக இந்திய ராணுவம் தகவல் அளித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டது.

ஆனால், சீனா இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இரு தரப்புக்கும் இடையே மோதல் கடுமையானதால், பதற்றத்தை தணிக்க ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எல்லைப் பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் பேசித் தீர்க்கவே விரும்புவதாக சீன அரசு கூறுகிறது. ஆனால், எல்லையில் களத்திலோ பிரச்சினையை தீர்க்க சீன ராணுவம் ஒத்துழைக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், லடாக் எல்லையில் நேற்று சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. பான்காங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது.

இது குறித்து ராணுவ அதிகாரி் ஒருவர் கூறுகையில் :-

லடாக்கின் பான்காங் சோ ஏரி அருகே அத்துமீற முயன்ற சீன ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள சூழலை சிதைக்கும் சில காரியங்களில் சீனா ஈடுபட்டு வருகிறது.. ராணுவ மற்றும் ராஜ்ஜிய மாவட்டங்களில் நடைபெற்ற பேச்சுவைார்த்தை உடன்படிக்கைகளை மீறி சீனா ராணுவம் செயல்படுகிறது. சீன ராணுவத்தின் இந்த செயல் இந்திய ராணுவத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.!

Views: - 0

0

0