இந்திய கடற்பகுதியில் ஊடுருவிய சீன ஆய்வுக் கப்பல்..! என்ன செய்தது அந்தமான் கடற்பரப்பில்..?
17 September 2020, 7:24 pmஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக் எல்லையில் பதட்டங்கள் அதிகரித்த நேரத்தில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் கடந்த மாதம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்குள் நுழைந்த சீன ஆய்வுக் கப்பலைக் கண்டறிந்துள்ளது.
சீனாவுக்குச் சொந்தமான யுவான் வாங் ஆராய்ச்சி கப்பல் கடந்த மாதம் மலாக்கா ஜலசந்தியில் இருந்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. பிராந்தியத்தில் அங்கு நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்களால் இது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
சீன கடற்படை கப்பல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சீனாவிற்கு திரும்பியது என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இத்தகைய ஆராய்ச்சி கப்பல்கள் சீனாவிலிருந்து தவறாமல் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் அவை இந்திய கடல்சார் நிலப்பரப்பு பற்றிய முக்கியமான தகவல்களைப் பெற முயற்சிக்கின்றன.
கடந்த ஆண்டு டிசம்பரில், சீன ஆராய்ச்சி கப்பல் ஷி யான் 1 அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேருக்கு அருகிலுள்ள இந்திய கடல் பகுதியில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அங்கு இயங்கும் கடல் கண்காணிப்பு விமானங்களால் கண்டறியப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திலும் கடல்சார் நகர்வுகள் குறித்து இந்தியா உன்னிப்பாகக் கண்காணிக்கக்கூடிய தீவுப் பிரதேசத்தில் இந்திய நடவடிக்கைகளை உளவு பார்க்க சீனர்களால் இத்தகைய கப்பல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
0
0