உயிருக்கு போராடும் கேப்டன் வருண்சிங்… பெங்களூரூக்கு அழைத்து செல்ல திட்டம்… கோவைக்கு அழைத்து வருகை!!

Author: Babu Lakshmanan
9 December 2021, 2:29 pm
varun singh - updatenews360
Quick Share

நீலகிரி : குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வரும் வீரரை பெங்களூரூவுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர். குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அங்கு மரியாதை செலுத்தப்பட்டு, சாலை மார்க்கமாக கோவை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து டெல்லிக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

அதேவேளையில், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கோமா நிலையில் உள்ள ராணுவ அதிகாரி வருண்சிங்கிற்கு, மூன்று ஆபரேஷன் நடந்துள்ளது. சுமார் 80 சதவீத தீக்காயங்களுடன் இருக்கும் அவர் உயிர் காக்கும் கருவியின் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அவரை மேல் சிகிச்சைக்காக பெங்களூரூ அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, அவர் கோவைக்கு சாலை மார்க்கமாக அழைத்து வர இருக்கிறார். அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரூவுக்கு கொண்டு செல்லப்படுகிறார். ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், சிகிச்சை தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

Views: - 279

0

0