நாங்களும் (குடி)மகன்கள்தான்…எங்களுக்கும் பற்று இருக்கும்ல: தெலங்கானாவில் நடந்த வேற லெவல் சம்பவம்..!!

Author: Aarthi Sivakumar
27 October 2021, 5:20 pm
Quick Share

தெலங்கானா: ஐதராபாத்தில் உள்ள பார் ஒன்றில் தொலைகாட்சியில் தேசிய கீதம் ஒளிக்கப்பட்ட போது, அங்கிருந்த குடிமகன்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்திய சம்பவம் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் ஹைத்ராபாத், கோர்ணாகா பகுதியில் உள்ள மதுபான பாரில் குடிமகன்கள் மது அருந்தி வந்துள்ளனர். அப்போது, அங்குள்ள தொலைக்காட்சியில் வழக்கம் போல் குத்து பட்டு கேட்டுக் கொண்டு குடிமகன்கள் கூலாக மது அருந்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் தொலைக்காட்சியில் திடீரென தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இதைக்கேட்ட குடிமகன்களில் சிலர் சற்றும் யோசிக்காமல் எழுந்து நின்று மரியாதை செலலுத்தினர். இன்றும் சிலரோ தேசிய கீதத்தை பாடிய படி எழுந்து நின்றனர்.

தேசிய கீதம் ஒலிக்கும் பொது மரியாதை தராத சில மக்களிடையே குடிமகன்கள் போதையிலும் மரியாதை அளித்தது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலால் குடிமகன்களின் தேசப்பற்றை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே வைரலாகி வருகிறது. குடிபோதையில் இருந்தாலும், இந்திய குடிமகனின் கடமையை சரிவர செய்தவர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Views: - 255

0

0