ஆந்திராவில் விறுவிறுப்பாக நடந்த சேவல் சண்டை : தடையை மீறி களைகட்டியது!!

16 January 2021, 3:35 pm
Cock Fight - Updatenews360
Quick Share

ஆந்திரா : பொங்கலை முன்னிட்டு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் தடையை மீறி விறுவிறுப்பாக சேவல் சண்டை நடைபெற்றது.

ஆந்திராவில் சேவல் சண்டை நடத்த தடை அமலில் உள்ளது. ஆனால் ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களான கோதாவரி மாவட்டங்கள், கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சேவல் சண்டை சம்பிரதாய விளையாட்டு.

எனவே ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி,பொங்கல் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் சேவல் சண்டைகள் ஜோராக நடைபெறுவது வழக்கம்.

சேவலுக்கு காலில் கத்திகளை கட்டியும், லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பந்தயமாக வைத்தும் பொங்கல் சமயத்தில் கடலோர மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டும் சேவல் சண்டை கனவில் காண ஜோராக நடைபெறுகிறது.

சேவல் சண்டை நடத்த சட்டப்படி தடை அமலில் உள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் சேவல் சண்டை நடத்தும் நபர்களுக்கு அளிக்கும் ஆதரவு காரணமாக அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

எனவே பிரம்மாண்டமான அளவில் பந்தல் போட்டு, விரிவான விளம்பரம் செய்து சேவல் சண்டை நடத்தப்படுகிறது.

Views: - 15

0

0