அடடே…புத்தாண்டு தினத்தில் சூப்பரான நியூஸ்: வணிக சிலிண்டர் விலை ரூ.102 குறைந்தது…!!

Author: Rajesh
1 January 2022, 12:52 pm
Quick Share

டெல்லி: டெல்லியில் வர்த்தக கேஸ் சிலிண்டருக்கான விலை இன்று 102.50 ரூபாய் குறைந்து 1998.50 விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டு 660 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி 4ஆம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15ஆம் தேதி மீண்டும் ரூபாய் 50ம் உயர்த்தப்பட்டது. ஒரே மாதத்தில் 175 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், 2022 புத்தாண்டு தினமான இன்று டெல்லியில், வர்த்தக சிலிண்டருக்கான விலை இன்று 102.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ள நிலையில், 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை 1998.50 ரூபாயாக உள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு காரணமாக ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.

Views: - 1186

0

0