ராணுவ ஆட்சேர்ப்பு தேர்வுக்கான கேள்வித் தாள் கசிந்ததால் பரபரப்பு..! தேர்வையே ரத்து செய்த இந்திய ராணுவம்..!
28 February 2021, 7:31 pmராணுவ ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கான தேர்வுத்த தாள் கசிந்துள்ள தகவல் வெளியானதை அடுத்து, தேர்வை ரத்து செய்வதாக ராணுவம் அறிவித்துள்ளது.
நாடு தழுவிய அளவில் இந்திய ராணுவம் வருடந்தோறும் ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது, இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஆட்சேர்ப்புக்கான தேர்வு, தேர்வுத்தாள் கசிந்ததால், ரத்து செய்யப்படுவதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொருத்தமான வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சேர்ப்பு பணியில் ஊழல் நடைபெறுவதை இந்திய ராணுவம் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று ஒரு அதிகாரி கூறினார்.
புனேவில் உள்ள உள்ளூர் போலீசாருடன் இணைந்து ராணுவம் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கையின் அடிப்படையில், படையினரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு தயாரிக்கப்பட்ட வினாத்தாள் கசிந்தது நேற்று இரவு கண்டறியப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
புனேவில் நடந்த சோதனையின் மூலம் கேள்வித் தாள் கசிந்த விவகாரத்தில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
0
0