அமெரிக்க வன்முறையில் இந்தியக் கொடியை பயன்படுத்திய விஷமி..! டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு..!

9 January 2021, 1:17 pm
Indian_Flag_US_Capitol_Riots_UpdateNews360
Quick Share

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க பாராளுமன்றத்திற்கு வெளியே நடந்த பரவலான போராட்டங்களின் போது இந்தியக் கொடியை உயர்த்திய இந்திய நாட்டவர் மீது டெல்லி போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியின் கல்காஜி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஜனாதிபதி பதவிக்கு ஆதரவை வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை போராட்டங்களின் போது அமெரிக்க குடிமகனாக இருக்கும் இந்தியரான வின்சன் சேவியர் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

டிரம்ப் சார்பு ஆதரவாளர்கள் கட்டிடத்தை முற்றுகையிட்டு, பாதுகாப்பை மீறி வியாழக்கிழமை அதிகாலை (அமெரிக்க நேரத்தின் பிற்பகுதியில்) அமெரிக்க பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட கட்டுக்கடங்காத காட்சிகள் காணப்பட்டன. பின்னர் தீவிரமடைந்த இந்த போராட்டத்தில் ஒரு பெண் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் இறந்தனர்.

பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதற்காக போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதிக்கொண்ட பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன.

ஒரு காட்சியில், டிரம்புக்கு ஆதரவாக அமெரிக்கக் கொடிகள் மற்றும் நீல நிறக் கொடிகள் ஆகியவற்றின் மத்தியில் இந்தியக் கொடியை அசைப்பதைக் காண முடிந்தது.

சேவியர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “அமெரிக்க தேசபக்தர்களான வியட்நாமிய, இந்திய, கொரிய மற்றும் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், மற்றும் பல நாடுகள் மற்றும் இனங்களைச் சேர்ந்தவர்கள் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடந்ததாக நம்புகிறார்கள். இதனால் டிரம்பிற்கு ஆதரவாக நேற்று பேரணியில் இணைந்தனர். அமைதியான போராட்டக்காரர்கள் தங்கள் உரிமையை பயன்படுத்தி போராட்டம் நடத்தினர்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க போராட்டத்தில் இந்திய மூவர்ண கொடி பயன்படுத்தப்பட்டது குறித்து காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூருக்கும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்திக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தைப் போர் மூண்டது. மேலும் பலரிடமிருந்து கடுமையான எதிர்வினைகளையும் ஏற்படுத்தியது.

“அங்கே ஏன் இந்தியக் கொடி இருக்கிறது ??? இது நிச்சயமாக நாங்கள் பங்கேற்கத் தேவையில்லாத ஒரு மோதல்.” என்று பாஜக எம்.பி. வருண் காந்தி ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது, இந்தியக் கொடியை பயன்படுத்திய விஷமி மீது, டெல்லி காவல்துறையிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 8

0

0