கொரோனாவைக் கட்டுப்படுத்த கர்நாடகாவில் 15 நாட்கள் முழு ஊரடங்கு..! முதல்வர் எடியூரப்பா அதிரடி உத்தரவு..!

7 May 2021, 8:56 pm
Bengaluru_LOckdown_UpdateNews360
Quick Share

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு, கர்நாடகா மே 10 காலை 6 மணி முதல் மே 24 காலை 6 மணி வரை மாநிலத்தில் முழுமையான ஊரடங்கு விதிப்பதாக முதலமைச்சர் எடியூரப்பா இன்று அறிவித்தார்.

“மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் வெற்றி பெறவில்லை. எனவே, மே 10 காலை 6 மணி முதல் மே 24 காலை 6 மணி வரை முழுமையான ஊரடங்கு விதிக்கப்படும். 

அனைத்து ஹோட்டல்களும், பப்களும், பார்களும் மூடப்படும். உணவகங்கள், இறைச்சி கடைகள் மற்றும் காய்கறி கடைகள் காலை 6-10 மணி முதல் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.” என்று முதல்வர் கூறினார்.

எனினும் இந்த ஊரடங்கு தற்காலிக முடிவு தான் என்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று எடியூரப்பா தெரிவித்தார்.

ஊரடங்கு குறித்து மேலும் பேசிய முதலமைச்சர், “ஊரடங்கு காலத்தில் காலை 10 மணிக்குப் பிறகு ஒரு நபர் கூட அனுமதிக்கப்படமாட்டார். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு நான் பரிந்துரைத்துள்ளேன். பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையைப் பார்த்து தான் நாங்கள் இதை முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 91

0

0