கேரளாவில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பரபரப்பு… பயங்கரவாத தாக்குதலா? முதலமைச்சரிடம் அமித்ஷா கூறிய அதிர்ச்சி தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2023, 1:09 pm
Bomb - Updatenews360
Quick Share

கேரளாவில் அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பரபரப்பு… பயங்கரவாத தாக்குதலா? முதலமைச்சரிடம் அமித்ஷா கூறிய அதிர்ச்சி தகவல்!!!

கேரளாவின் எர்ணாகுளம் களமச்சேரியில் 2,000 பேர் ஒன்று திரண்டிருந்த பிரார்த்தனை கூட்டம் இன்று நடைபெற்றது. அனைவரும் கண்ணை மூடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்த போது திடீரென அடுத்தடுத்து பயங்கர வெடி சப்தம் கேட்டது. இதில் பிரார்த்தனை கூட்டமே பற்றி எரிந்தது. பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். இந்த வெடி விபத்தில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். 29 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 5 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.

இந்த நிலையில் இந்த வெடி விபத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள் சதி செயல் இருக்கிறதா? என்பது குறித்து கேரளா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேரளா மாநிலம் முழுவதும் உச்சகட்ட உஷார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடி விபத்து குறித்து கேட்டறிந்தார். அப்போது வெடி விபத்து குறித்து என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார். மேலும் வெடி விபத்து நிகழ்விடத்துக்கு தேசிய பாதுகாப்பு கமாண்டோ படையினர் விரைந்துள்ளனர்.

கேரளா மாநில காங்கிரஸ் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சதீஷன் கூறுகையில், 2 முறை வெடி சப்தம் கேட்டதாகவும் இதனால் தீ பிடித்ததாகவும் கூறப்படுகிறது. 2-வது முறை லேசான வெடி சப்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு பெண் பலியானார். 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரார்த்தனை கூடத்தில் மொத்தம் 2,000க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டிருந்தனர் என்றார்.

Views: - 256

0

0