மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் 3,500 மசூதிகளை இடித்து தரைமட்டமாக்குவது உறுதி..! முஸ்லீம் எம்பி பகீர் குற்றச்சாட்டு..!

24 January 2021, 6:11 pm
AIUDF_chief_UpdateNews360
Quick Share

இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள அசாமில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பத்ருதீன் அஜ்மல், பாஜக 2024’இல் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள 3,500 மசூதிகளை இடித்து தரைமட்டமாக்கும் எனும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அசாமில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முஸ்லீம் சமுதாயத்தை தனிமைப்படுத்தி, வகுப்புவாத உணர்வுகளை வளர்ப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாக, துப்ரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள கௌரிபூரில் நடந்த தேர்தல் பேரணியில் ஏஐடியுஎப் தலைவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். “பாஜக நாடு முழுவதும் 3,500 மசூதிகளை பட்டியலிட்டுள்ளது, மேலும் 2024 பொதுத் தேர்தலில் அடுத்த அரசாங்கத்தை அமைத்தால் அவை அனைத்தையும் இடிக்கும்” என்று அவர் கூறினார்.

பாஜகவை மேலும் விமர்சித்த அஜ்மல், குர்ஆன் முத்தலாக்கை அனுமதித்ததாகவும், ஆனால் நரேந்திர மோடி அரசு அதை ஒழித்ததாகவும் கூறினார். பாஜக மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதையும், முஸ்லீம் ஆண்கள் நீண்ட தாடியை வைப்பதையும், பாரம்பரியமாக தலையில் அணியும் தொப்பிகளையும் அவர்கள் உறுதியாக தடை செய்வார்கள் என்றும் அஜ்மல் எச்சரித்தார்.

ஏஐடியுஎப், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஎம்எல் மற்றும் அஞ்சலிக் கண மோர்ச்சா ஆகிய கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணியை அமைத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

இதற்கிடையில், அசாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் ஏஐயுடிஎப் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார். இரு கட்சிகளும் அசாமில் ஊடுருவியவர்களை வரவேற்க அனைத்து வாயில்களையும் திறக்கும் என்றும், பாஜக மட்டுமே அதைப் பாதுகாக்க முடியும் என்றும் கூறினார்.

காங்கிரஸ் மக்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்ததாகவும், அசாமில் 20 ஆண்டுகளாக மோதல்கள் மற்றும் வன்முறை மட்டுமே இருந்ததாகவும், 10,000 இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும் அமித் ஷா மேலும் கூறினார். 

அசாமி இளைஞர்களை காங்கிரஸ் தோட்டாக்களால் கொன்றதாக அவர் குற்றம் சாட்டினார். “அசாமில் எங்களுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் அவகாசம் கொடுங்கள், தோட்டாக்கள், கிளர்ச்சிகள் மற்றும் வெள்ளத்தில் இருந்து அசாமை முழுமையாக விடுவிப்போம்.” என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 0

0

0