உடுப்பி சிங்கம் என அழைக்கப்பட்ட காங்.,மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார் : அவருக்கு வயது 80!!

By: Udayachandran
13 September 2021, 4:43 pm
Oscar Fernandez- Updatenews360
Quick Share

இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆஸ்கர் பெர்னாண்டஸ் போக்குவரத்து, சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார். கர்நாடகாவின் உடுப்பி தொகுதியில் இருந்து 1980 இல் 7வது மக்களவைக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் கர்நாடக தொகுதியில் இருந்து மேலும் நான்கு முறை வெற்றி பெற்றார். 1999 மக்களவைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்த பிறகு காங்கிரஸால் ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

மேலும் அவர் ராகுல் காந்தி மற்றும் காந்தி குடும்பத்தின் நெருங்கிய நம்பிக்கையாளர்களில் ஒருவராக வலம் வந்தவர். ஜூலை மாதம் மூளையில் இருந்து இரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் பெர்னாண்டஸ், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 152

0

0