பாஜக வங்கி கணக்குகளை முடக்குக.. தேர்தல் பத்திர ஊழலை சிபிஐ விசாரிக்க வேண்டும் ; காங்கிரஸ் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
15 March 2024, 4:43 pm
Quick Share

சட்டவிதிகளை மீறி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளதால் பாஜக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு வங்கி சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், அதனை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், 12ம் தேதி மாலைக்குள் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும், இல்லையேல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்தது.

இதைத் தொடர்ந்து, பட்டியலை எஸ்பிஐ வங்கி வெளியிட்ட நிலையில், அதனை தேர்தல் ஆணையம் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிட்டது. அதில், அதிகபட்சமாக, மார்ட்டின் நிறுவனமான ப்யூச்சர் கேமிங் மற்றும ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் ரூ.1,368 கோடி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது. அதேபோல, தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பெற்ற கட்சிகளில் பாஜக முதலிடத்தில் உள்ளது. அந்தக் கட்சி ரூ.6,060.50 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது.

இந்த நிலையில், சட்டவிதிகளை மீறி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளதால் பாஜக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :- தேர்தல் பத்திரங்கள் மூலம் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது பாஜக. விசாரணை அமைப்பு மூலம் தனியார் நிறுவனங்களை பாஜக மிரட்டியுள்ளது.

பாஜக மிரட்டலுக்கு பயந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கப்பட்டுள்ளன. சட்டவிதிகளை மீறி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்றுள்ளதால் பாஜக வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற கண்காணிப்பில் தேர்தல் பத்திர ஊழலை விசாரிக்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 232

0

0