ம.பி.யிலும் ஆட்டம் காணப் போகும் காங்கிரஸ் : முன்னாள் பெண் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் இணைந்தார்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2021, 2:01 pm
Cong Former Mla Joins Bjp - Updatenews360
Quick Share

மத்திய பிரதேசம் : முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சுலோச்சனா ராவத் முதல்வர் சிவராஜ் சவுகான் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கு முன்பதாகவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சுலோச்சனா ராவத் ஆளும் பாஜகவில் இணைந்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

ராவத் மற்றும் அவரது மகன் விஷால் ராவத் ஆகிய இருவரும் நேற்று இரவு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்களது முன்னிலையில் பாஜகவில் இணைந்து உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் விடி சர்மா கூறியுள்ளார்.

Views: - 220

0

0