மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..!!

7 March 2021, 3:58 pm
Congress_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் முதற்கட்டமாக வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்கள் பெயர்களை உள்ளடக்கிய காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்படப்பட்டுளது. இதேபோல அசாமில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 40 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் வேட்பாளர் பட்டியலில், 4 முறை எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் மூத்த தலைவர் நேபால் மகோதா, பாகுமுண்டி தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 294 இடங்களில், 92 இடங்களில் போட்டியிடுகிறது.

இதேபோல அசாமில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 40 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத் தலைவர் ரிபுன் போரா,கோபூர் தொகுதியில் களம் காண்கிறார்.

Views: - 8

0

0