சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்..! வீடியோ அம்பலமானதால் பரபரப்பு..!
30 January 2021, 10:32 amகாங்கிரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர், சட்டமன்றத்தில் தனது மொபைல் போனில் பாலியல் படங்களின் வீடியோக்களை பார்த்ததாகக் கூறப்படுகிறது.
சில கன்னட செய்தி சேனல்களின் படி, காங்கிரஸ் எம்.எல்.சி பிரகாஷ் ரத்தோட் சட்டமன்றத்தில், சபை நடவடிக்கைகளின் போது ஆபாச உள்ளடக்கங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். இதை செய்தி சேனல்கள் வீடியோவாக எடுத்து ஒளிபரப்பியது. இந்த வீடியோவில் ரத்தோட் சில ஆபாச வீடியோ படங்களை ஸ்க்ரோலிங் செய்வதைக் காட்டுகிறது.
எனினும், காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் ரத்தோட் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததோடு, கேள்வி நேரத்தில் அரசாங்கத்திடம் கேட்க விரும்பும் கேள்விக்கான பொருள்களைத் தேடுவதாகவும், தனது மொபைல் போன் சேமிப்பு நிரம்பியதால் சில செய்திகளை நீக்குவதாகவும் கூறினார்.
“நான் கேள்விக்கான தகவலைத் தேடும்போது, எனது தொலைபேசி சேமிப்பு நிரம்பியிருந்ததால், தொலைபேசியில் இருந்த பல கோப்புகளை நீக்கினேன். ஊடகங்கள் பார்த்தது அல்லது காட்டியது எனக்குத் தெரியாது. அத்தகைய செயல்களை நான் செய்வதோ அல்லது இதுபோன்றவற்றைப் பார்ப்பதோ இல்லை.” என்று அவர் கூறினார்.
முன்னதாக 2012’ல், மூன்று அமைச்சர்கள் மாநில சட்டசபையில் ஒரு மொபைல் போனில் ஆபாச படங்களைப் பார்த்ததாகக் கூறி கேமராவில் சிக்கினர். அப்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு இது ஒரு களங்கமாக மாறியது.
அப்போது இந்த சம்பவம் தொடர்பான பின்னடைவைத் தொடர்ந்து, மூன்று அமைச்சர்களும் ராஜினாமா செய்ய ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
0
0