இடைத்தேர்தல் வருவதால் கட்சி தாவிய காங்கிரஸ் எம்எல்ஏ : பாஜகவில் ஐக்கியமானதால் ம.பி அரசியலில் பரபரப்பு!!

Author: Aarthi Sivakumar
24 October 2021, 6:12 pm
Cong Mla In Bjp- Updatenews360
Quick Share

மத்தியபிரதேசம் : இடைத்தேர்தலை முன்னிட்டு மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ சச்சின் பிர்லா பாஜகவில் இணைந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மக்களவைத் தொகுதியின் எம்எல்ஏ தான் சச்சின் பிர்லா. கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹிதேந்திர சிங் சோலங்கி அவர்களை தோற்கடித்து காங்கிரஸ் எம்எல்ஏவாக ஆனார். வருகிற அக்டோபர் 30-ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சச்சின் பிர்லா தற்பொழுது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் வைத்து பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தான் ஜோபாட்டின் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சுலோச்சனா ராவத், தனது மகன் விஷால் ராவத்துடன் பாஜகவில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 212

1

0