‘தொகுதிக்கு என்ன செஞ்சீங்க’ : கேள்வி கேட்ட இளைஞரை அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ..!!!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2021, 6:15 pm
Cong Mla Slaps Youth -Updatenews360
Quick Share

பஞ்சாப் : பொதுக்ககூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட எம்எல்ஏவிடம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பிய இளைஞரை எம்எல்ஏ அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தல் முதலமைச்சர் பிரச்சனை ஒருவழியாக ஓய்ந்த நிலையில், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பதான்கோட் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்எல்எ ஜோஜிந்தர் பால் பங்கேற்றார். பின்னர் தொகுதிக்காக அவர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் அவர் பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் தொகுதிக்கு உண்மையா நீங்க என்ன செய்யீதர்கள் என கேள்வி எழுப்பினார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இளைஞரை கூட்டத்தில் இருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர்.

ஆனால் அவர் ஆக்ரோஷத்துடன் எம்எல்ஏ பார்த்து தொடர்ந்து கேள்வி கேட்க முயன்றார். இதில் ஆத்திரமடைந்த எம்எல்ஏ, இளைஞரை தாக்க முயன்றார். மேலும் இளைஞரின் கன்னத்தில் அறைய முயன்றார். மேலும் எம்எல்ஏ அறைந்ததும் மட்டுமல்லாமல் பாதுகாப்பில் இருந்த காவலர்களும் சேர்ந்து தாக்கினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 341

0

0