“ஊடகங்களின் புதிய முகத்தை” புரிந்துகொள்ள தாமதம் ஆகிவிட்டது” – பிரியங்கா காந்தி..!
19 August 2020, 10:14 amகாந்தி குடும்பத்தை சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கருத்துக்கு தானும் உடன்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
இந்தியாவின் அரசியல் கட்சிகளில் மிக பெரிய செல்வாக்கு மிகுந்த கட்சி காங்கிரஸ். ஜவஹர்லால் நேரு காலம் முதல் இன்று வரை அந்த கட்சிக்கு என்ற தனிப்பெருமை உள்ளது.
ஆனால், தற்போது, அந்த கட்சியில் சில தட்டுதடுமாற்றங்கள் நிலவி வருகிறது. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பொருபேற்றிருந்தார்.
ஆனால், அந்த தேர்தலில் காங்கிரஸ் எதிர்பாராத விதமாக படுதோல்வியை தழுவியது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொருப்பில் இருந்து ராகுல்காந்தி விலகுவதாக தெரிவித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என குறிப்பிட்டார். அதன் பின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி பொருபேற்று வழிநடத்தி வருகிறார்.
இந்த சூழலில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியின் கருத்தை முன்மொழிந்துள்ளார். காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கருத்துக்கு தானும் உடன்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவின் நிலைபாட்டுக்கு எதிரான கருத்துக்களில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என குறிபிட்ட பிரியங்கா காந்தி, “ஊடகங்களின் புதிய முகத்தை” புரிந்துகொள்ள தாமதம் ஆகிவிட்டது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்து விட்டது என பிரியங்கா காந்தி கூறினார்.