மாஃபியா தாதாவை விருந்தினர் போல் நடத்தும் காங்கிரஸ் மாநில அரசுகள்..! பிரியங்கா காந்திக்கு கடிதம் எழுதிய எம்எல்ஏ..!

2 February 2021, 4:10 pm
mukhtar_ansari_updatenews360
Quick Share

முன்னாள் எம்.எல்.ஏ கிருஷ்ணானந்த் ராயின் விதவை மனைவியான பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. அல்கா ராய், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ராவுக்கு மேலும் ஒரு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசாங்கங்கள் மாஃபியா டான் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ முக்தர் அன்சாரி மற்றும் அவரது குடும்பத்தினரை மாநில விருந்தினர்கள் போல் நடத்துகின்றன என்று அதில் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

2005’இல் பாஜக எம்எல்ஏ கிருஷ்ணானந்த் ராய் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்தர் அன்சாரி குற்றம் சாட்டப்பட்டு தற்போது ரோப்பர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அல்காரி ராய் தனது கடிதத்தில், அன்சாரியின் மகன் அப்பாஸ் அன்சாரியின் தலைக்கு ரூ 25,000 பரிசுத் தொகை நிலையில், சமீபத்தில் ஜெய்ப்பூர் பாணியில் அவர் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின எனக்  குறிப்பிட்டுள்ளார்.

“முக்தர் அன்சாரியை உத்தரப்பிரதேசத்திற்கு அழைத்து வர யோகி ஆதித்யநாத் அரசாங்கம் தனது குழுக்களை 32 முறை அனுப்பியுள்ளது. ஆனால் பஞ்சாப் அரசு அவரை அனுப்பவில்லை. ஒரு பெண்ணாக, எனது வேதனையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் நீங்கள் எனது கடிதங்களை அறிந்து கொள்ளவோ ​​அல்லது பதிலளிக்கவோ இல்லை.” என்று அவர் பிரியங்கா காந்திக்கு எழுதிய கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிராக பிரியங்கா தொடர்ந்து எழுதுவதால், காங்கிரஸ் அரசுகளின் நடத்தை குறித்து தான் ஒரு பதிலை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

ஜனவரி 30 தேதியிட்ட கடிதம் இன்று ஊடக நபர்களுக்கு வெளியிடப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்த கருத்தும் வெளியாகவில்லை.

Views: - 45

0

0