ஹரியானா இடைத்தேர்தல்..! மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்..!

10 November 2020, 8:48 pm
yogeshwar_dutt_updatenews360
Quick Share

அண்மையில் ஹரியானாவிலும் அதன் அண்டை மாநிலமான பஞ்சாபிலும் நடந்த உழவர் போராட்டத்தின் பின்னர் நடைபெற்ற பரோடா சட்டமன்றத் தேர்தலில் ஹரியானாவில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் ஜாட் ஆதிக்கம் செலுத்தும் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக இந்தூ ராஜ் நர்வாலும் பாஜக சார்பாக ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரரான யோகேஸ்வர் தத்தும் மோதிய நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இதே தொகுதியில் கடந்த அக்டோபர் 2019 சட்டமன்றத் தேர்தலில், யோகேஸ்வர் தத்தை தோற்கடித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீ கிரிஷன் ஹூடாவின் மரணத்தைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அவசியமானது.

காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் பஞ்சாபில் போராட்டங்கள் கடுமையாக நடந்துள்ள போதிலும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹரியானா பாஜக தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர், இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு, “பரோடா தொகுதி முன்பு காங்கிரசுடன் இருந்தது. இந்த வாய்ப்பை எங்களால் ஒரு சவாலாக மாற்ற முடியவில்லை. அந்த இடம் தற்போதும் காங்கிரஸிடமே கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆணையை ஏற்றுக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் கோட்டையான, பரோடாவைக் கைப்பற்றும் முயற்சியில் பாஜகவை அதன் கூட்டாளியான ஜன நாயக் ஜந்தா கட்சியும் பாஜகவை ஆதரித்தது.

இறுதி முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், இருவருக்குமான வாக்கு வித்தியாசம் வெகு தொலைவில் உள்ளதால், காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 23

0

0

1 thought on “ஹரியானா இடைத்தேர்தல்..! மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்த ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்..!

Comments are closed.