ரூ.10-க்கு ஆசைப்பட்டு 2 லட்சத்தை இழந்த பிரபல உணவகம்..!

27 August 2020, 3:51 pm
Quick Share

மும்பையில் ஐஸ்கிரீமிற்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த உணவகத்திற்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளரான பாஸ்கர் என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு உணவகம் ஒன்றில் ஐஸ்கிரீம் வாங்கியுள்ளார். அவரிடம் ரூ.165 பில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கூடுதலாக ரூ.10 சேர்த்து ரூ.175 ஆக வசூலித்துள்ளனர். இதனால் அங்கு இருந்த உரிமையாளரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர்கள் கூடுதலாக வசூலித்த பணத்தை திருப்பி தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பாஸ்கர், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு ரூ. 2 லட்சம் அபரதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த உணவகம், இதே போல் அனைவரிடமும் பணம் வசூலித்திருந்தால் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை வசூல் செய்திருக்கக்கூடும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உணவகங்கள் மற்றும் கடைகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஐஸ்கிரீமை சேமித்து வைப்பதற்கு அதிக செலவு செய்யப்படுவதால்தான் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக உணவகம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இந்த முறை நியாயமற்றது என நீதிமன்றம் அவர்களது விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டது.

Views: - 25

0

0