மீண்டும் சர்ச்சைக்கு ஆளான கங்கனா : 2 மணி நேரத்தில் இரண்டு டிவிட்டுகளை நீக்கிய டிவிட்டர்!!

4 February 2021, 5:09 pm
Kangana Twit- Updatenews360
Quick Share

டிவிட்டர் விதிமுறைகளை மீறியதாக நடிகை கங்கனா ரனாவத்தின் டிவிட்டுகளை டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்தங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து உலக பிரபலங்கள் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்ட பாப் பாடகி ரியானாவை முட்டாள் என்றும், போராடும் விவசாயிகளை இந்தியாவை பிரிக்க முயற்சிக்கும் தீவிரவாதிகள் என்றும் கங்கனா டிவிட் செய்திருந்தார்.

இந்த நிலையில் இது போன்ற டிவிட்டுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததால் கங்கனாவில் டிவிட்டுகளை 2 மணி நேரத்தில் டிவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. இது அவருக்கு புதிதல்ல, ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்தால் அந்த டிவிட்டை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது.

அதே போல சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க்கை எலி என்றும் குறிப்பிட்டிருந்த பதிவை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. ஏற்கனவே சர்ச்சைக்குரிய பதிவுகளால் கங்கனா டிவிட்டர் கணக்கு இடைக்காலமாக டிவிட்டர் நிறுவனம் முடக்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Views: - 14

0

0