போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு : குண்டடி பட்டு சுருண்டு விழுந்தவரின் மார்பில் ஏறி மிதித்த அரசு புகைப்படக்காரர்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 12:50 pm
Assam Violence - Updatenews360
Quick Share

அசாம் : டர்ரங்க் மாவட்டம் அருகே போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அசாம் மாநிலம் டர்ரங்க மாவட்டம் சிபஜ்கர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சுமார் 800க்கும் மேற்பட்டவர்கள் குடியிருப்புகள் அமைத்து வசித்து வந்தனர்.

இதையடுத்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த மக்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் போர்க்களமாக மாறியது.

நிலைமை மோசமானதால் ஆக்கிரமிப்பாளர்களை கலைக்கும் நோக்கத்தோடு போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பாளர்களில் ஒருவர் போலீசார் மீது தாக்க தடியை எடுத்து ஓடி வரும் போது போலீசார் அவரை சுட்டனர்.

இதில் சுருண்டு விழுந்த அவர் உயிருக்காக துடித்துடித்து கெண்டிருந்த போது அரசு புகைப்படக்காரர் ஒருவர் அவர் மீது ஏறி இறங்கி மிதித்து ஓங்கி அடித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் ஆக்கிரமிப்பாளர்களை கலைந்து செல்ல நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ஒரு புகைப்படக்காரர் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

போலீசார் மற்றும் பொதுமக்களிடையே ஏற்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
புகைப்படக்காரர் ஏறி மிதித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புகைப்படக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Views: - 156

1

0